February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விடுத்துள்ள செய்தி!

(Photo : Twitter/Keheliya Rambukwella)

புதிய சுகாதார அமைச்சராக பதவியேற்றுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நன்றி தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தன்னை சுகாதார அமைச்சராக நியமித்த ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, கொரோனா தொற்று நோயைக் கையாள்வதில் இதுவரை சிறப்பாக பணியாற்றிய முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

 

நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா தொற்று நோயை தோற்கடிக்க ஒத்துழைக்க வேண்டும் எனவும் புதிய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கையில் கல்வி, சுகாதாரம், வெளிவிவகாரம், ஊடகத்துறை உள்ளிட்ட முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன் படி, ஊடகத் துறை அமைச்சராக பதவி வகித்த கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகவும், இதுவரை சுகாதார அமைச்சராக பதவி வகித்த பவித்திரா வன்னியாராச்சி போக்குவரத்து அமைச்சராகவும் பதவியேற்றுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.