யுத்தத்தின் போது மேற்கொண்டதைப் போன்ற தீர்மானங்களால் தொற்று நோயைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தன்னிச்சையான செயற்பாடுகளை நிறுத்திவிட்டு, மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொற்று நோயைக் கட்டுப்படுத்த முடியாவிடின் நாட்டை ஆட்சி செய்ய முடியுமானவர்களுக்கு வழங்கிவிட்டு, இராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் போக்குவரத்துகளை நிறுத்தி, தத்தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.