May 25, 2025 17:11:49

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குறைந்த உறுப்பினர்களுடன் பதிவு திருமணங்களை நடத்த அனுமதி!

இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை அமுல்படுத்தி வருகின்றது.

அதன்படி நாளை (17) நள்ளிரவு முதல் திருமணங்கள் மற்றும் மக்களின் ஒன்று கூடல்களுக்கு தடைவிதிக்கப்படுவதாக  இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பதிவு திருமணங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

திருமண தம்பதியர், அவர்களது பெற்றோர், சாட்சிகள் மற்றும் பதிவாளர் ஆகியோரின் பங்கேற்புடன் திருமணப் பதிவுகளை வீடுகளில் நடத்தலாம் எனவும், இவர்களை தவிர ஏனையவர்கள் நிகழ்வில் பங்கேற்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, இன்று (16) இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணிவரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.மறு அறிவித்தல் வரை இவ்வாறு ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அத்தியாவசிய சேவைகளுக்காக செல்பவர்களுக்கு இந்த காலப்பகுதியில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.