
அமெரிக்காவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மேலும் தொகை பைசர் தடுப்பூசிகள் இன்று இலங்கை வந்துள்ளன.
அதன்படி, ஒரு இலட்சம் பைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை இந்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இவை பாதுகாப்பாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இதேவேளை இதற்கு முன்னர் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட டோஸ் ‘பைசர்’ தடுப்பூசிகள் அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.