November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேலியகொட மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா

கொழும்பு பேலியகொட மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இன்று முதல் பேலியகொட மீன் சந்தையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார சேவை அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மீன் சந்தைக்கு வருபவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று முன்தினம் பேலியகொட மீன் சந்தையில் சுமார் 100 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.