இலங்கையில் நாடளாவிய ரீதியல் நாளை (16)முதல் இரவு நேர தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட உள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதன்படி, மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருக்கும் என்று இராணுவத் தளபதி மேலும் கூறினார்.
எனினும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஊரடங்கின் போது விலக்களிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு இந்தக் காலப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கொவிட் தடுப்பு செயல்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.