January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புத்தல பகுதியில் வாவியில் மூழ்கி இளைஞர்கள் மூவர் உயிரிழப்பு

புத்தல பகுதியில் கட்டுகஹகல்கே வாவியில் மூழ்கி மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மூவரே  இவ்வாறு குளம் ஒன்றில் நீராட சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மொனராகலை பட்டுகம்மன பிரதேசத்தை சேர்ந்த ஆரம்.எம்.தனஞ்சய தேஷான் (வயது 18),மொனராகலை சிறிகல மற்றும் ரத்தனப்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த டி.பி.ரந்தீப தாரக்க (வயது 18), கோரள கமகே இமேஷ் (வயது 18) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மூவரும் தமது நண்பர்களை பார்வையிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர் என்றும்,  மாலை வரை வீடு திரும்பாததன் காரணமாக பெற்றோர் அவர்களது தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

தொலைபேசி அழைப்புகள் செயலிழந்து காணப்பட்டதால் குறித்த மாணவர்களில் ஒருவரின் பெற்றோர் பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், புத்தள படல்கும்புர வீதி, கட்டுகஹகல்கே வாவிக்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், தொலைபேசிகள் மற்றும் ஆண்கள் அணியும் ஆடைகள் காணப்படுகின்றன என்று மீனவர்கள் சிலர் புத்தள பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலுக்கு அமைவாக பொலிஸார் குறித்த இடத்துக்கு வந்து பிரதேச மக்களின் உதவியுடன்  குறித்த மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதுடன், 20 வயதிற்கும் குறைந்த மூன்று இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.