இலங்கையின் கிளிநொச்சியை சேர்ந்த மாணவன் ஒருவர் சூரிய சக்தியில் இயங்கும் ஆட்டோவை உருவாக்கியுள்ளார்.
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் பயிலும், ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சுந்தரலிங்கம் பிரணவன் என்ற மாணவனே இந்த ஆட்டோவை உருவாக்கியுள்ளார்.
கொவிட் முடக்க காலப் பகுதியில் வீட்டில் இருந்த போது இந்த ஆட்டோவை வடிவமைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பயன்பாட்டில் இருந்து ஒதுக்கப்பட்ட இரும்புப் பொருட்களை பயன்படுத்தியே இதனை வடிவமைத்தாக பிரணவன் கூறியுள்ளார்.
ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளுக்காக கழிவுப்பொருட்களினைக் கொண்டு தனது தாத்தாவின் உதவியுடன் சூரிய சக்தியில் இயங்கும் துவிச்சக்கர வண்டியை உருவாக்கியிருந்தார்.
இதனை தொடர்ந்து கொரோனா காலத்தில் வழங்கப்பட்டுள்ள பாடசாலை விடுமுறைக் காலத்தில் வீட்டில் இருந்து கற்கும் நேரங்கள் போக மற்றைய நேரங்களில் சூரிய சக்தியில் இயங்கும் ஆட்டேவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அடுத்ததாக சூரிய சக்தியில் இயங்கும் காரை வடிவமைக்க எதிர்பார்த்துள்ளதாகவும், இதற்கு அரசாங்கத்தின் உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் சுந்தரலிங்கம் பிரணவன் தெரிவித்துள்ளார்.