November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல் மாகாணத்துக்குள் உட்பிரவேசிக்க முயன்ற 582 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை மீறி மேல் மாகாணத்திற்குள் நுழைய முயன்ற 582 பேர்  நேற்று (14) திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும், நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட பரிசோதனை நடவடிக்கைகளின் போது 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இதனையடுத்து,  தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 54 ஆயிரத்து 359 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை மீறி மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட 382 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

அத்துடன், நேற்றைய தினம் 4,500 வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மாகாணங்களுக்குள் பிரவேசிக்கும் குறுக்கு வீதிகளிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, அதிவேக நெடுஞ்சாலையில் நுழையும் வாகனங்களிலும் சிறப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.