January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னார் மடு மாதா திருவிழா சுகாதார கட்டுப்பாடுகளுடன் சிறப்பாக நடைபெற்றது

மன்னார் மடு மதா தேவாலயத்தின் வருடாந்த ஆவணித் திருவிழா திருப்பலி இன்று காலை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.

திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் சிலாபம் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை மற்றும் ஆயர்கள் இணைந்து கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

மடு மாதாவின் வருடாந்த ஆவணி திருவிழா கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மடுத்திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளார் தலைமையில் கொடியேற்றம் செய்யப்பட்டது.தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று மாலை வெஸ்பர் ஆராதனை இடம்பெற்று¸ நற்கருணை ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.

பின்னர் இன்று காலை 6.15 மணிக்கு ஆயர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர்.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம் பெற்ற தோடு,மடு அன்னையின் ஆசி வழங்கப்பட்டது.

நாட்டில் கொரோனா தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில் மடு திருத்தலத்திற்கு ஏனைய மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பக்கதர்களின் வருகை நிறுத்தப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் சுகாதார வழிமுறைகள்¸ கட்டுப்பாடுகளுக்கு அமைவாக திருவிழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

This slideshow requires JavaScript.