இலங்கையின் பொருளாதாரத்திற்காக ஒரு பில்லியன் டொலரை ஈட்டும் இலங்கை நோக்கியே அரசாங்கம் பயணிக்கின்றது என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தொலைகாட்சி ஒன்றுடனான நாட்டின் பொருளாதார நிலவரம் குறித்த நேர்காணலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு சர்வதேச நிதியத்திடமிருந்து விசேட உதவியாக 800 மில்லியன் டொலர் கிடைக்கவுள்ளதாக அவர் இதன் போது கூறியுள்ளார்.
தற்போது புதிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும், பயிற்சியுடன் கூடிய பயன்பாட்டு வளம் தொடர்பில் நாம் கவனம் செலுத்தினோம் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், நாட்டில் உள்ள குறிப்பிடத்தக்களவு வளத்தை பயன்படுத்தி மேலும் 400 மில்லியன் டொலரை ஈட்ட முடியும் என்றும் இந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இதன்படி எல்லாம் முறையாக நடந்தால் இலங்கையால் ஒரு பில்லியன் டொலை ஈட்ட முடியுமாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.