January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய சுதந்திர தினம்: கொழும்பில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வு!

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வையொட்டி கொழும்பில் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தலைமையில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.

கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

கொவிட் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.

இதேவேளை சுதந்திர தினத்தையொட்டி கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம், யாழ்ப்பாணம் மற்றும் கண்டியில் உள்ள துணைத் தூதரகங்களிலும் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.