January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”கொரோனா தொடர்பான தகவல்களை அரசாங்கம் மூடி மறைக்கின்றது” – எதிர்க்கட்சித் தலைவர்

இலங்கையில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது என்று தெரிந்தும், அரசாங்கம் அது தொடர்பாக நடவடிக்கையெடுக்காது தகவல்களை மூடி மறைத்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று ஒழுங்குப் பிரச்சனையை எழுப்பிய சஜித் பிரேமதாஸ இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

”நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ள போதும், இது சமூக தொற்றாக மாறவில்லை என்று சுகாதார அமைச்சர் தெரிவித்து வருகின்றார்.சமூக தொற்றாக இந்த வைரஸ் மாறியுள்ளது என்பது அரசாங்கத்திற்கு தெரியும். ஆனால் தெரிந்தும் அதனை மூடி மறைத்து வருகின்றது” என்று சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.