November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை: 33ஆவது ஆண்டு நினைவு

யாழ்.போதனா வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 33 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிகள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 வைத்தியசாலை பணியாளர்களும், சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்களுமாக 68 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்தோருக்கான அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்ட உத்தியோகத்தர்களின் உறவினர்களால் சுடரேற்றி, மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்கள், வைத்தியசாலையின் கணக்காளர், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.