June 14, 2025 22:48:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மூன்றாவது நாளாக 150 ஐ கடந்தது!

இலங்கையில் மேலும் 160 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மூன்றாவது நாளாகவும் 150 ஐ கடந்தது பதிவாகியுள்ளது.

73 பெண்களும் 87 ஆண்களும் உயிரிழந்தவர்களிடையே அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5,935 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3,245 பேர் இன்று (14) இனங் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 51,515 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 3 இலட்சத்து 7345 ஆக உயர்வடைந்துள்ளது.