நாட்டின் தற்போதைய கொவிட் நிலைமையை கட்டுப்படுத்த திங்கட் கிழமை முதல் சுய ஒழுங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறு பொது மக்களுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கத்தை இனியும் தமது சங்கம் கட்டாயப்படுத்தாது எனவும் அதன் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
சில தினங்களாக தினசரி தொற்று எண்ணிக்கை 3,000 க்கும் அதிகமாக பதிவாகி வருவதோடு, 150 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகின்றன.
அடுத்த சில நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகலாம். உண்மையில் நேற்று (13) விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் புதியவை அல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே மக்கள், நிலைமையை புரிந்து கொண்டு வீடுகளில் இருக்கும் படி தாம் வலியுறுத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டிலிருந்து கொவிட் தொற்றை இல்லாதொழிப்பது நம் அனைவரினதும் பொறுப்பு. இதனை புரிந்து கொண்டு முடிவுகளை எடுத்தால் நாடு அழகாக இருக்கும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் அறிவுறுத்தினார்.