January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘லங்கா ஈ நிவ்ஸ்’ எழுத்தாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

‘லங்கா ஈ நிவ்ஸ்’ இணையதளத்தின் எழுத்தாளர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக போலியான செய்தி வெளியிட்ட குற்றச்சாட்டில் குறித்த எழுத்தாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டியில் வசித்து வரும் கீர்த்தி ரத்னாயக என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் விமானப்படை வீரரான கீர்த்தி ரத்னாயக ‘லங்கா ஈ நிவ்ஸ்’ க்கு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான கட்டுரைகளை எழுதி வந்துள்ளார்.