January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிவாஜிலிங்கம் தலைமையில் செஞ்சோலை சம்பவத்தின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்

செஞ்சோலை நிகழ்வின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு கொலை செய்யப்பட்டவர்களுக்கு வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சுடரேற்றி, அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தின் முன்பாக இன்றைய தினம் காலை சிவாஜிலிங்கம் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அஞ்சலிக்கு பொலிஸார், இராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்தியதாகவும், தடைகளை மீறி அஞ்சலி செலுத்தியதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்த செஞ்சோலை சிறுவர் பராமரிப்பு இல்லத்தின் மீது கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி விமான படையினர் மேற்கொண்ட விமான குண்டு வீச்சில் 53 மாணவிகளும் 7 பணியாளர்களும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

This slideshow requires JavaScript.