பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய டயகம சிறுமி ஹிஷாலினியின் சடலம் இரண்டாவது முறையாக மீண்டும் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நுவரெலியா நீதிமன்ற நீதவான் லுசாக்கா குமாரி முன்னிலையில் மூன்று சிரேஷ்ட சட்ட வைத்தியர்கள் ஊடாக சிறுமி ஹிஷாலினியின் சடலம் கடந்த ஜூலை 30 ஆம் திகதி தோண்டியெடுக்கப்பட்டது.
இரண்டாவது முறையாக சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதணைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், பேராதெனிய போதனா வைத்தியசாலையில் இரண்டாவது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பிரேத பரிசோதனைகள் முடிவுற்ற நிலையில் சிறுமியின் உடல் மீண்டும் 15 நாட்களுக்கு பின்னர் நேற்று ஜெய வழிபாடுகளுடன் மீண்டும் அதே புதைகுழியில் அடக்கம் செய்யப்பட்டது.