November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் பொலிஸாருக்கு பயிற்சி அளிப்பதை இடைநிறுத்தியது ஸ்கொட்லாந்து

இலங்கையின் பொலிஸாருக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை ஸ்கொட்லாந்து தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான கவலைகளை அடிப்படையாகக் கொண்டே, பொலிஸாருக்கு பயிற்சி அளிப்பதை இடைநிறுத்தியதாக ஸ்கொட்லாந்து தெரிவித்துள்ளது.

இலங்கை பொலிஸாருடன் இணைந்து செயற்படுவதை இடைநிறுத்துமாறு சர்வதேச பங்காளர்களிடம் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கேட்டுக்கொண்டிருந்தது.

ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் வேண்டுகோளுக்கு முன்னர், இந்த ஆண்டின் மே மாதம் முதல் பயிற்சி அளிப்பதை தாம் இடைநிறுத்தியதாக ஸ்கொட்லாந்து பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இலங்கைக்கான பிரிட்டன் தூதரகத்தின் நிதி உதவியில் இலங்கையின் பொலிஸாருக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் நடைபெற்று வந்தது.

மூன்று வருட பயிற்சிக் காலத்தைக் கொண்ட இந்த திட்டம் இடைநடுவே தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் தொடர்பான கவலைகளைக் கருத்திற்கொண்டு இவ்வாறான பயிற்சித் திட்டம் ஒன்று இடைநிறுத்தப்பட்டமையை தாம் வரவேற்பதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.