இந்தியாவிடம் இருந்து 100 மெட்ரிக் டொன் ஒக்சிஜன் கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொரோனா சிகிச்சை நிலையங்களில் ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தைத் தொடர்ந்தே, அரசாங்கம் இவ்வாறு கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது.
அடுத்த வாரமளவில் இந்தியாவிடம் இருந்து குறித்த தொகை ஒக்சிஜன் கொள்வனவு செய்யப்படும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தேவைக்கு ஏற்ப எதிர்வரும் காலங்களிலும் இந்தியாவிடம் இருந்து ஒக்சிஜன் கொள்வனவு செய்யப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.