
இலங்கையில் முகக் கவசம் அணியாதோர் தொடர்பான கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா பரவல் அபாயம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முகக் கவசம் அணியாமல் பயணிப்போரைக் கைது செய்ய இன்று முதல் விசேட பொலிஸ் சுற்றிவளைப்புகள் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுவோரை கைது செய்து, தனிமைப்படுத்தலுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.