January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர் கொரோனாவுக்கு பலி

யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (13) மேலும் 5 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதடியை சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதேபோல்,கொழும்புத் துறையைச் சேர்ந்த 79 வயதுடைய ஒருவரும் புத்தூரைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் ஏழாலை மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும் கோண்டாவிலைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரும் என 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் யாழ்.மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 176 ஆக உயர்வடைந்துள்ளது.