20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தை இன்று ஆரம்பித்து வைத்து நீதியமைச்சர் அலி சப்ரி உரையாற்றினார்.
இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பிரதமருக்கான அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக தெளிவுபடுத்த முடியுமா எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நீதியமைச்சர் அலி சப்ரி, “அதனை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். இதுகுறித்து நீங்கள் முதலைக் கண்ணீர் வடிக்க வேண்டாம்” என்றார்.
இதன்போது குறுக்கிட்ட எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, “நாட்டின் பிரதமரை அலுவலக உதவியாளராக மாற்றுவதற்கு நீங்கள் முயற்சிக்கின்றீர்கள்” என்றார்.
இதனையடுத்து, சஜித் பிரேமதாஸவை பேசுவதை நிறுத்தி அமர்ந்துகொள்ளுமாறு ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.