July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் 155 கொவிட் தொற்றாளர்கள் மரணம்!

இலங்கையில் மேலும் 155 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாகவும் தினசரி கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களிடையே 85 ஆண்களும் 70 பெண்களும் அடங்குகின்றனர்.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5,775 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் மூவர் 30 வயதிற்குட்பட்டவர்கள், எனவும் 41 பேர் 30-59 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் 111 பேர் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட  வயதுடையவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3,152 பேர் இன்று (13) இனங் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 48,270 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 38,022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தோடு, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 3 இலட்சத்து 4,628 ஆக உயர்வடைந்துள்ளது.