July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆறு புதிய கல்வி தொலைக்காட்சி சேவைகள் அடுத்தவாரம் முதல் ஆரம்பிக்க திட்டம்!

ஆறு புதிய கல்வி தொலைக்காட்சி சேவைகள் மற்றும் வானொலி அலைவரிசை ஒன்றும் அடுத்த வாரம் தொடங்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கூறினார்.

கல்விக்காக 20 தொலைக்காட்சி சேவைகளை தொடங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக இந்த அலைவரிசைகள் தொடங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர்  இதனை தெரிவித்தார்.

‘விஷன் எஃப்எம்’ வானொலி அலைவரிசை இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து தொடங்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

PEO TV மூலம் ஸ்ரீலங்கா டெலிகொம் உடன் இணைந்து முழுநேர, ஒளிபரப்பாக இதுவரை இல்லாத வகையில் இந்த கல்வி சேவைகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்காக இதுவரை 7,000 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் தேசிய கல்வி நிறுவனத்தின் தலையீட்டுடன் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பீரிஸ் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில், அடுத்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்த உள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

குரு கேதரா மற்றும் இ-தக்ஸலாவா போன்ற நிகழ்ச்சிகளைத் தவிர, கல்வி சேவைகளின் ஒளிபரப்பு தொடர்பான அனைத்து முடிவுகளும் விரைவில் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.