January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

இலங்கை  ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை மற்றும் பிராந்திய அலுவலகங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தில் பல ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார்.

இதன்படி, அலுவலக ஊழியர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டியேற்பட்டுள்ளதால் மறு அறிவித்தல் வரை பொது மக்களுக்கான அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.

எனினும், ஏற்கனவே தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு உரிய தினத்தில் அல்லது அதற்கு முன்னதாக அவர்களின் அடையாள அட்டைகளை தயார்படுத்தி தபால் ஊடாக அனுப்பி வைக்கப்பட உள்ளதாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று அவசர தேவைகளுக்காக தேசிய அடையாள அட்டையை உடனடியாகப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையுடையவர்கள் அலுவலக தினங்களில் கீழ்வரும் இலக்கங்களை தொடர்பு கொண்டு அது தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

பிரதான காரியாலயம் – 011 – 5226126 / 011 – 5226100

தென் மாகாண காரியாலயம் – 091 – 2228348

வடமேல் மாகாண காரியாலயம் – 037 – 2224337

கிழக்கு மாகாண காரியாலயம் – 065 – 2229449

வட மாகாண காரியாலயம்- 024 – 2227201