
முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின்போது கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது பாணந்துறை வீடு ஊழியர்களுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து தன்னுடன் தொடர்பை பேணியவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.
இதேவேளை, தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் உடல்நிலை சீராக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.