
இலங்கையில் செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் பொது இடங்களுக்கு செல்வோரிடம் தடுப்பூசி அட்டைகளை பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை இடம்பெற்ற கொவிட் கட்டுப்பாடுகள் தொடர்பான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுவரும் நிலையில், குறித்த வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இவ்வாறு தடுப்பூசி அட்டைகள் பரிசோதிக்க படும் என இராணுவ தளபதி குறிப்பிட்டார்.
செப்டம்பர் முதல் வாரத்துக்குள் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த இலக்கின் படி தற்போதுவரை 98 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிட்டத்தட்ட 30 சதவீதமனவர்கள் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டுள்ளதாக தடுப்பூசி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.