இலங்கையில் அனைத்து மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிவு முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இந்தக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி சுகாதாரம், துறைமுகம், சுற்றுலாத்துறை, ஆடைத்தொழிற்சாலை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுடன் தொடர்புடையவர்களுக்கு மாத்திரம் மாகாணங்களுக்கு இடையே பயணிக்க அனுமதி வழக்கப்படும் என்று இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் பொது இடங்களுக்கு செல்வோரிடம் தடுப்பூசி போட்டுக்கொண்டமைக்கான அட்டை பரிசோதிக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.