January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொலிஸார் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலை சோஷலிச கட்சி முறைப்பாடு!

முன்னிலை சோஷலிச கட்சியின் செயற்பட்டாளர்களின் வீடுகளுக்கு சென்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும், இது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்துமாறும் கோரி கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அந்தக் கட்சியினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கட்சியின் கல்வி செயலாளர் புபுதுஜயகொட உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

பொலிஸார் எனக் கூறிக்கொண்டு சிவில் உடையில் தமது கட்சி உறுப்பினர்களின் வீடுகளுக்கு செல்வோர், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளின் ஈடுபடுவதாக அவர்கள் அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இதனால் பொலிஸ்மா அதிபர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளை அழைத்து அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொள்வதாக முறைப்பாட்டாளர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.