இலங்கையில் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வரும் நிலையில், ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகளில் இதுவரை எவரும் உயிரிழக்கவில்லை என ஆயுர்வேத வைத்திய ஆணையாளர் தம்மிக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 45 நாட்களில் 3,820 கொவிட் நோயாளர்கள் ஆயுர்வேத வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 2,843 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்த நிலையில், வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு எவரும் உயிரிழக்கவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளில் 10, 388 படுக்கை வசதிகள் உள்ளன எனவும் வைத்தியர் அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.