
இலங்கையில் ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு முதல் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுப் பரவலுக்கு மத்தியில் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தமக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று நள்ளிரவு ஆரம்பமான இந்தப் போராட்டம் இன்று நள்ளிரவு வரையில் தொடரும் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் இன்றைய தினத்தில் ரயில் சேவைகளை முறையாக நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.