July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“ஒக்ஸிஜன் இறக்குமதியில் வெளிநாடுகளை முழுமையாக நம்பியிருக்க முடியாது”

இலங்கை ஒக்ஸிஜனை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ள சூழ்நிலையில், வெளிநாடுகளை முழுமையாக நம்பி நாம் இருக்க முடியாது என்று சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஹேமந்த ஹேரத் கூறினார்.

வெளிநாடுகளின் நிலைமையும் மோசமாக இருப்பதால் இலங்கைக்கு ஒக்ஸிஜனை வழங்க அவர்கள் தயங்குவார்கள் என்றும் ஹேரத் தெரிவித்தார்.

“நாட்டின் ஒக்ஸிஜன் இருப்புக்கள் கிட்டத்தட்ட குறைந்துவிட்டன. டெல்டா மாறுபாடு இலங்கையில் ஆதிக்கம் செலுத்துவதால், பல நாடுகளைப் போலவே, ஒக்ஸிஜனுக்கான தேவையும் சமமாக உயர்ந்துள்ளது,”என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எல்லாவற்றிற்கும் எப்போதும் ஒரு எல்லை உண்டு. நாட்டில் ஒக்ஸிஜனின் தேவை பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்து நிலைமையை சமநிலைப்படுத்த நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சிகளை செய்து வருகிறோம்”என்றும் அவர் மேலும் கூறினார்.