இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்ததாக புதிய நிறுவனத்தை ஆரம்பித்து எல்.பி எரிவாயுவை தயாரித்து போட்டி விலையில் சந்தைக்கு விநியோகிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தற்போது இலங்கையின் எல்.பி எரிவாயு தேவையில் சுமார் 5 வீதத்தை உற்பத்தி செய்யும் நிலையில் இந்த தயாரிப்புகளை லிட்ரோ எரிவாயு நிறுவனம் மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனத்திற்கு சமமாக வழங்குகிறது.
மின்சக்தி அமைச்சு புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை சபுகஸ்கந்த பிரதேசத்தில் நிர்மாணிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ள நிலையில், குறித்த சுத்திகரிப்பு நிலையம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் உள்நாட்டு சமையல் எரிவாயு தேவையில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்யக்கூடிய இயலுமை உள்ளதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.