
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனமும் கோப்பாயில் இருந்து கைதடி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டதில் சந்தியிலுள்ள சமிக்ஞை விளக்கு சேதமடைந்து தொலைத் தொடர்பு கம்பம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டது.
சமிக்ஞை இலக்கங்கங்கள் ஒளிர்ந்து கடைசி மூன்று செக்கன்கள் முடிவடையும் நிலையில் மற்றைய பகுதிக்கு செல்வதற்காக வேகமாக பயணித்த இரண்டு கனரக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று எதிர்பாராத விதமாக மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் வாகனத்தின் சாரதி ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் சமிக்ஞை விளக்கு பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவரும் மயிரிழையில் உயிர் தப்பியதுடன், இந்த விபத்தின் காரணமாக போக்குவரத்தும் சிறிது நேரம் தடைப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.