July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் நாளாந்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 150 ஐ தாண்டியது!

இலங்கையில் கொவிட் தொற்றால் நாளாந்தம் உயிரிழப்போரின்  எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து செல்கின்றது.

இதன்படி, ஆகஸ்ட் 10 ஆம் திகதி 124 பேர் உயிரிழந்திருந்த நிலையில், நேற்று 11 ஆம் திகதி 156 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,620 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நாட்டில் இன்று 2,420 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 344,402 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.