இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ‘கொழும்பு திட்டத்தின்’ உறுப்பு நாடுகளுக்கு வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்புத் திட்டத்தின் 47 ஆவது ஆலோசனைக் குழு கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் உரையாற்றும் போதே, இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்புத் திட்டம் கூட்டு நலனுக்காக முறையான அறிவினைப் பகிர்தல், கண்டுபிடிப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு மிகவும் பயனுள்ள தளமாக செயற்படும் என தினேஷ் குணவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் கொழும்புத் திட்டத்திற்குள், நிலையான பசுமை நகரங்களை உருவாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை செயற்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலைத் தொடர்ந்து சர்வதேச ஒத்துழைப்பு, முன்னெப்போதையும் விட இன்று மிகவும் முக்கியமானது என்றும் இந்த சூழலில் கொழும்புத் திட்டம் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நிலையான நகரங்களை உருவாக்குவது தொடர்பான முதலீட்டிற்கு கொழும்பு திட்டத்தின் உறுப்பு நாடுகளுக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.
தொற்றுநோயால் பல வழிகளில் பாதிக்கப்படுகின்ற கொழும்பு திட்டத்தின் சக உறுப்பு நாடுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு இலங்கை சார்பில் வெளியுறவு அமைச்சர் பிரார்த்தித்துள்ளார்.