கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரேத அறையில் 2017 தொடக்கம் உரிமை கோரப்படாமல் இருந்த 26 சடலங்கள் மட்டக்களப்பு ஓட்டமாவடியில் நேற்று இரவு அடக்கம் செய்யப்பட்டதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌபர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரேத அறையில் தேங்கிக் கிடந்த 40 சடலங்களை ஓட்டமாவடி கொரோனாவினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் இடத்தில் அடக்கம் செய்ய கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளை, ஓட்டமாவடியில் கொரோனாவினால் உயிரிழந்த 1537 பேரின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து அதிகளவான சடலங்கள் வருவதனால் ஓட்டமாவடியில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.