May 23, 2025 9:48:15

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கோரி தொழிற்சங்கங்கள் கொழும்பில் சத்தியாக்கிரகம்

இலங்கையில் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கோரி தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து சத்தியாக்கிரகம் ஒன்றை ஆரம்பித்துள்ளன.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சத்தியாக்கிரகத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம், ஆசிரியர் சேவை சங்கம், அதிபர் சங்கம் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்களும் பங்கேற்றுள்ளன.

நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படும் வரை சத்தியாக்கிரகத்தைக் கைவிட மாட்டோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.