இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே, சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை மாற்றமொன்று இடம்பெறுவதாயின், அரசாங்கம் இதுதொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா பரவல் முறையாக கட்டுப்படுத்தப்பட வேண்டுமாயின் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்று நளின் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
அர்த்தமுள்ள விதமாக அமைச்சுப் பதவி மாற்றங்கள் இடம்பெறாவிட்டால், எவ்வித பயனும் இல்லை என்று எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.