January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”அடுத்துவரும் வாரங்கள் இலங்கைக்கு தீர்மானம் மிக்கவை”: வைத்தியர் சந்திம ஜீவந்தர

இலங்கையில் டெல்டா வைரஸின் தாக்கம் எதிர்வரும் வாரங்களில் தீவிரமடையும் அபாயம் காணப்படுவதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்கு முறையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நேயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ ஆய்வுப் பிரிவின் பணிப்பாளரான வைத்தியர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

நாட்டின் கொவிட் நிலவரம் தொடர்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

குறிப்பாக அடுத்த இரண்டு மூன்று வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கவை என்றும், சீனாவின் வூகான் மாநிலத்தை விடவும் இரண்டு மடங்கு வேகத்தில் இங்கு தொற்றுப் பரவுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நேரத்தில் நாங்கள் 5 வினாடிகளுக்கு முகக்கவசம் அணியாமல் இருந்தால் கூட நமக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று சந்திம ஜீவந்தர கூறியுள்ளார்.

இதேவேளை எதிர்காலத்தில் நம்மிடையே உணவு இன்றி இறப்பதா? ஒக்சிஜன் இன்றி இறப்பதா? என்ற கேள்விகள் எழலாம். ஆனால் உணவு இல்லாவிட்டால் இருப்பவர்கள் எமக்கு வழங்குவர். ஒக்சிஜன் இல்லாவிட்டால் எம்மால் வாழவே முடியாது போகும். இதனால் இது தொடர்பில் தீர்மானங்களை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.