February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு – ஹட்டன் வீதியில் மண்சரிவு: போக்குவரத்துக்கு பாதிப்பு!

கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியின் கினிகத்தேனை பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக அந்த வீதியூடான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த மண்சரிவின் போது, பாரிய மரமொன்றும் முறிந்து வீதியில் விழுந்துள்ளது.

முச்சக்கர வண்டியொன்றின் மீதும் லொறி ஒன்றின் மீதும் இந்த மரம் முறிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதிலும் வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மரத்தை மற்றும் மண்சரிவையும் அகற்றும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மலையகத்தில் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருவதால் அந்த வீதியில் செல்வோர் மண்சரிவு குறித்து அவதானமாக வாகனங்களைச் செலுத்த வேண்டும் என்று பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.