இலங்கையில் டெல்டா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்தத் தவறினால் திரிபுபட்ட புதிய வைரஸ் தொற்றுகள் உருவாகும் வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் அவ்வாறான நிலையொன்று ஏற்பட்டால், மிக மோசமான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் நாளுக்கு நாள் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், மரணங்களும் கூடிக்கொண்டே செல்கின்றதாக வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பொறுப்பு வாய்ந்தவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும் என இலங்கை வைத்தியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேல் மாகாணத்தில் அதிகளவு சனத்தொகை காணப்படுகின்ற காரணத்தினால், மாகாணத்தை முடக்காது எந்வித நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியாது எனவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.