February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொழும்பு மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை’: மாவட்ட செயலாளர்

கொழும்பு மாவட்டத்தில் அண்ணளவாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாமல் இருப்பதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் 30 முதல் 59 வயதுடைய 99,373 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 46,600 பேரும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாமல் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு மற்றும் கொலன்னாவ பிரதேசங்களில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே தடுப்பூசி பெற்றுக்கொள்வதைத் தவிர்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் தொடர்பில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஷாலிகா மைதானத்தில் உள்ள தடுப்பூசி நிலையத்தில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.