தடுப்பூசி நிலையங்களுக்கு செல்ல முடியாத விசேட தேவையுடையோர் மற்றும் முதியவர்களுக்கென நடமாடும் தடுப்பூசி வேலைத்திட்டம் இன்று முதல் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரின் ஏற்பாட்டில் முதற்கட்டமாக மேல்மாகாணத்தில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன்படி மேல் மாகாணத்தில் வசிக்கும் விசேட தேவையுள்ள மற்றும் முதியவர்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று தடுப்பூசி ஏற்றுவதற்காக இந்த சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் 10 மணியிலிருந்து இந்த சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
இவ்வாறு தடுப்பூசி ஏற்றுவதற்காக இராணுவத்தினரின் 10 நடமாடும் வாகனங்கள் சேவையில் ஈடுபடவுள்ளன.
இதன்படி 1906 மற்றும் 0112 860 002 எனும் இலக்கங்களுக்கு அழைப்பை அழைப்பை ஏற்படுத்தி தடுப்பூசி ஏற்ற வேண்டியோர் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.