File Photo
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமொன்று, பொலிஸாரினால் நிறுத்துமாறு விடுக்கப்பட்ட சமிக்கையை மீறி பயணித்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கரடியனாறு பங்குடாவெளிச் சந்தியில் இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் குறித்த உழவு இயந்திரத்தில் பயணித்த செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவர் காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்