May 22, 2025 19:35:08

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணத்தில் பஸ் விபத்து: பலர் காயம்!

காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்கு உள்ளானதில் பலர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 7.30 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கல்லுண்டாய் வீட்டுத்திட்ட பகுதியில் தனியார் பஸ் ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது குறித்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இலங்கை போக்குவரத்து சபையின் காரைநகர்  சாலைக்கு சொந்தமான அந்த பஸ்ஸின் சாரதி தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீதியில் ஒவ்வொரு நாளும் குறித்த அந்த பஸ் மிகவும் வேகமாகவே பயணிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.