
ஆபத்தான ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை, முள்ளி என்ற இடத்தில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அதே இடத்தைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு வாள்கள் மற்றும் கஜேந்திரா வாள், கோடாரி என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் இருவரும் மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.