February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி

வடக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவரின் துணைவியாருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், பிரதம செயலாளருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதம செயலாளருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வடக்கு மாகாண சபையின் மேலும் சில மூத்த அதிகாரிகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வடக்கு மாகாண சமூக சேவைத் திணைக்கள ஆணையாளரும் வடக்கு மாகாண பதில் காணி ஆணையாளருமான சோதிநாதன் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் ஆயகுலன் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வடக்கு மாகாண திணைக்களங்களில் பணியாற்றுபவர்கள் கொரோனாப் பரிசோதனைக்கு உட்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.